#IPL2026 | சென்னை – டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு சென்னை அணி, டெல்லியை எதிர்கொள்கிறது.

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் இரவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி, டெல்லியை எதிர்கொள்கிறது.

5 முறை சாம்பியனான சென்னை அணி, இந்த சீசனில் தனது முதல் 3 ஆட்டங்களில் ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு அணிகளிடம் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லி அணி தனது முதல் இரு ஆட்டங்களில் லக்னோ, மும்பையை பந்தாடியது. குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்க முடியாமல் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19-ல் சென்னையும், 12-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.