GOLD RATE | தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

இதனிடையே நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்துக்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.125-ம், சவரனுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 125-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,100-க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,800-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே, அதாவது, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.