தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 6 ஆயிரத்து 999 எம்.பி.பி.எஸ் இடங்களும், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரத்து 930 பி.டி.எஸ் படிப்புகளுக்கான இடங்களும் உள்ளன.
இந்த படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி இன்று சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சிறப்பு பிரிவினர்களான மாற்றுத்திறனாளிகள் மற்றும் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அண்மைச் செய்தி: இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு..
நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளதாகவும், இதனை தொடர்ந்து 30ம் தேதி முதல் பொது கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement: