முக்கியச் செய்திகள் இந்தியா

இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு..

தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட 6 கூகுள் அதிகாரிகள் மீது காப்புரிமை சட்டத்தின் விதியை மீறியதாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சுனீல் தர்ஷன் மும்பையை சேர்ந்த பிரபலமான பாலிவுட் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தனது படப்பிடிப்பு பணியை 1987ஆம் ஆண்டு தொடங்கினார். இவர் இதுவரை 16 படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2017 ஆன் ஆண்டு “ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா” என்ற படத்தை இவர் இயக்கியிருந்தார். அந்த திரைப்படத்தை மர்ம நபர்கள் சட்டவிரோதமாக யூடியூப்பில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர். ஆனால் இந்த படத்தின் காப்புரிமையை இயக்குநர் சுனில் தர்சன் யாருக்கும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சட்டவிரோதமாக தனது படம் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், காப்புரிமை சட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனத்தின் மீதும், அதன் நிர் வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மும்பை நீதிமன்றத்தில் சுனில் தர்சன் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்ற உத்தரவின் படி சுந்தர் பிச்சை மற்றும் கூகுள் அதிகாரிகள் ஐவர் மீது காப்புரிமை சட்டத்தின் விதியை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துளனர். திரைப்பட இயக்குநர் சுனீல் தர்ஷன் என்பவர், தன்னுடைய ek haseena thi ek deewana tha என்ற திரைப்படத்தை சிலர் யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்திருந்தார்.

அண்மைச் செய்தி: தேவாலய சிலை உடைப்பு: சிறுவன் உள்பட இருவர் கைது

மேலும், யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட படத்தை கூகுள் அனுமதித்திருப்பது காப்புரிமை சட்டத்தை மீறியதாகும் என்றும், கூகுள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் சுனீல் தர்ஷன் கூறியிருந்தார். இவரது வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மும்பை போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..

Saravana Kumar

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

Ezhilarasan

மின்வாரிய துறையில் முறைகேடு புகார்; அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு

Halley Karthik