முக்கியச் செய்திகள் தமிழகம்

பூஸ்டர் டோஸ் கட்டாயமில்லை: மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திகொள்வது கட்டாயமில்லை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார்.

ஜனவரி 28ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்படுவதாகவும், பிப்.4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் எனவும் தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். அதேபோல பிப்.5ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை எனவும், பிப்.7ம் தேதி மனுவை வாபஸ் பெற இறுதி நாள் என்றும் அதேபோல வாக்கு எண்ணிக்கை பிப்.22ம் தேதி நடைபெறம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தேர்தலின் போது பிண்பற்ற வேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு நெரிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் 1.33 லட்சம் பேர் ஈடுபடவிருக்கும் நிலையில், தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திகொள்வது கட்டாயமில்லை என அறிவித்துள்ளது. மேலும், இரண்டாவது தவணை செலுத்தி, 9 மாதங்கள் கழித்து கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி

Saravana Kumar

கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் எப்போது இடைத் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்; எல். முருகன் தகவல்!

Saravana

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும்: முதல்வர்!

Saravana Kumar