முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

2.86 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,86,384 தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 22 லட்சத்து 02 ஆயிரத்தி 472 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில், 2 லட்சத்து 86 ஆயிரத்து 384 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நேற்றைய கொரோனா எண்ணிக்கையை விட சற்றே அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி, ஒரே நாளில், 573 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 700 ஆக
அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 06 ஆயிரத்து 357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய
சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் த.வா.க வேல்முருகன்

இந்நிலையில், கொரோனாவை மேலும் கட்டுப்படுத்த நாடு முழுவது 163.84 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 2,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Halley Karthik

சென்னை புத்தகக் காட்சியில், முகக்கவசத்தோடு கையுறையை கட்டாயமாக்குக!

Arivazhagan CM

போடியில் வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்!

Halley Karthik