முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் அதனை ஒன்றிய அரசு நிறைவேற்றி தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 11 மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பிரதமர் கலந்துக்கொள்ளும் முதல் அரசு விழா என்பதால் பிரதமருக்கு நன்றி என தெரிவித்தார்.

அனைத்து மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி அமைய வேண்டும் என்பது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவு என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற குறிக்கோளை நடைமுறைப்படுத்துவோம் என 2006-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்த கனவு இன்று நினைவாகியுள்ளது எனவும், தமிழ்நாடு அரசின் மருத்துவ துறைக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் எனவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் அதனை ஒன்றிய அரசு நிறைவேற்றி தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Advertisement:
SHARE

Related posts

பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும்: நிதி அமைச்சர்

Gayathri Venkatesan

’திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்து விட்டார்’: எம்.பி மீது தொழிலதிபர் பரபரப்பு புகார்!

Ezhilarasan

மதுராவில் இறைச்சி, மதுவிற்குத் தடை: யோகி ஆதித்யநாத்

Saravana Kumar