முக்கியச் செய்திகள்

அரிவாள்மனையால் வெட்டிய மருமகனை மன்னித்த மாமியார் – சிறை தண்டனையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

கடன் வாங்கிய பிரச்சனையில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிய மருமகனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மாமியார் மன்னித்துவிட்டார் என்ற காரணத்தின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

சேலம், ஆத்தூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2017 டிசம்பர் 28ஆம் தேதி இவர் வாங்கிய கடனை
திரும்ப செலுத்துவதில் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த
சுப்பிரமணி வீட்டில் இருந்து அரிவாள்மனையை எடுத்து தனது மாமியாரின் முதுகில்
வெட்டியுள்ளார். இதையடுத்து, மாமியார் கொடுத்த புகாரின் அடிப்படையில்
சுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை
விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம் சுப்பிரமணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்
சிறைத் தண்டனை விதித்து கடந்த மே 25ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை
எதிர்த்து சுப்பிரமணி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,
சுப்பிரமணி சார்பில் வழக்கறிஞர் பாயிண்ட் பாலாஜி ஆஜராகி, மனுதாரரும் அவரது
மாமியாரும் சமாதானமாகியுள்ளனர். எனவே, மனுதாரரை விடுதலை செய்ய வேண்டும். மாமியாரும், மனுதாரரின் மனைவியும் குழந்தைகளும் வந்துள்ளனர் என்றார். அப்போது, நீதிமன்றத்தில் மனுதாரரின் மாமியார், மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆஜராகினர். தனது மகள் மருமகனுடன் வாழ வேண்டும். மேலும் குழந்தைகளை வளர்க்க வேண்டும், எங்களுக்குள் சமாதானம் ஆகிவிட்டதால் மருமகனை மன்னித்துவிட்டேன். அவரை விடுதலை செய்யுங்கள் என்று மாமியார் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில்: கணவருக்கும், மனைவிக்கும் இடையே
ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதில் உயர் நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை
பயன்படுத்தலாம் என்று ஜோஷி என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்
தெரிவித்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் உயர் நீதிமன்றம் குடும்ப
பிரச்னையில் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். இந்த வழக்கில் கொலை முயற்சி மற்றும் கொடுங்காயம் விளைவித்தல் பிரிவில் மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் குற்றம் நடந்துள்ளது. கணவருக்கும், மனைவிக்கும் இடையே இருந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, உயர் நீதிமன்றத்திற்கு தரப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி மனுதாரரை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்

EZHILARASAN D

21 வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் திண்டுக்கல் ஐ லியோனி

Vel Prasanth

நகைக்கடன் தள்ளுபடி: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

EZHILARASAN D