அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் இயக்குநர் டி.ராஜேந்தர்!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் டி.ராஜேந்தர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்ததால் நாளை நாடு திரும்பவுள்ளார்.  இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள…

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் டி.ராஜேந்தர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்ததால் நாளை நாடு திரும்பவுள்ளார். 

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி டி.ராஜேந்தர் அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார்.

அமெரிக்கா மருத்துவமனையில் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக டி.ராஜேந்தர் குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியால், அங்கேயே ஒரு மாதம் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.

இதையடுத்து சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்த டி.ராஜேந்தர் குடும்பத்தினருடன் சென்னை திரும்பவுள்ளார். அமெரிக்காவிலிருந்து திரும்பி நாளை அதிகாலை 2 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைகிறார். அவருடன் இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ், பேரன் ஜேசன் ஆகியோரும் நாடு திரும்புகின்றனர்.

சென்னை வந்த பின் முதலில் தனது சிகிச்சைக்காக உதவி செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து டி.ராஜேந்தர் நன்றி கூறவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.