விஷச்சாராயத்தால் பறிபோகும் பார்வை… வெளியான அதிர்ச்சி தகவல்!

விஷச்சாராயம் அருந்தி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரும்பாலானோருக்கு கண் பார்வை பறி போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக விஷச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது. …

விஷச்சாராயம் அருந்தி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரும்பாலானோருக்கு கண் பார்வை பறி போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக விஷச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது.  இந்நிலையில்,  நேற்று முன் தினம் அங்கு விஷச்சாராயம் குடித்த 6 பேர் வாந்தி,  மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்தனர்.  அதை தொடர்ந்து மேலும் விஷச்சாராயம் குடித்த 100-க்கும் மேற்பட்டோர் வாந்தி,  மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி ஜிப்மர்,  கள்ளக்குறிச்சி,  சேலம்,  விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நிலையில் இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்திருந்தது.  மேலும்,  பலர் சிகிச்சையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ஆர்.ஜே.பாலாஜி-யின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட்! – போஸ்டர் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

இந்நிலையில்,  விஷச்சாராயம் குடித்ததில் உடல்நலன் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரும்பாலானோருக்கு கண் பார்வை பறிபோனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும், சிகிச்சை பெற்று வரும் பலருக்கு கண் பார்வை மங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதற்கிடையே, உயிரிழந்தோரில் பலருக்கு கண் பார்வை பறிபோனது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.