வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இன்னும் தண்ணீர்; மக்கள் வேதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாததால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர்கனமழையால், நாகர்கோவில், குழித்துறை, வைக்கலூர், மங்காடு, திக்குறிச்சி போன்ற பகுதிகளில்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாததால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர்கனமழையால், நாகர்கோவில், குழித்துறை, வைக்கலூர், மங்காடு, திக்குறிச்சி போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் வடியாமல் உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலானோர் வீடுகளில் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். மேலும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் சேதமடைந்து பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முல்லையாற்றில் சிக்கி கிருஷ்ணமணி என்பவர் மாயமாகி உள்ளார். அவரை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.