கரையில் 100க்கும் மேற்பட்ட பஞ்சல் ஆமை முட்டைகள் : பத்திரமாக மீட்ட வனத்துறை

பஞ்சல் ஆமை  முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கரை ஒதுங்கிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் வனத்துறையினரால் பாதுகாப்பாக தனி இடத்தில் மணலில் புதைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கடற்கரை கிராமமான கூட்டப்பனையில் பஞ்சல் ஆமை என்றழைக்கப்படும்…

பஞ்சல் ஆமை  முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கரை ஒதுங்கிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் வனத்துறையினரால் பாதுகாப்பாக தனி இடத்தில் மணலில் புதைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் கடற்கரை கிராமமான கூட்டப்பனையில் பஞ்சல் ஆமை என்றழைக்கப்படும் அரிய வகை ஆமை முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கரை ஒதுங்கிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் வனத்துறையினரால் பாதுகாக்கபடுகிறது.

நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியான கூட்டப்பனையில், பஞ்சல் ஆமை
என்றழைக்கப்படும் ஆலிவ் ரெட்லி வகையை சேர்ந்த கடல் ஆமை முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கிய ஆமை மணல் பரப்பில் ஆழமான குழியை உருவாக்கி அதில் நூற்றுக்கும் மேலான முட்டைகளை இட்டு மணலை மூடி பாதுகாப்பாக வைத்தது.

இதனையும் படியுங்கள்: வாட்சப்பில் தவறுதலாக அனுப்பிய பதிவுகளை எடிட் செய்யலாமா.? – எப்புட்ரா..?

இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் நெல்லை வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த கூட்டப்பனை கடற்கரைக்கு வந்த வனச்சரக அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் முட்டையிட வந்த கடல் ஆமையை பாதுகாப்பாக மீட்டு மீனவர்கள் அதை கடலுக்குள் விட்டனர்.

அலையின் வேகத்தில் முட்டைகள் அடித்து செல்லப்பட்டு சேதமாகி விடக்கூடாது என
கருதி ஆமையால் மண்ணில் புதைக்கப் பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள்
சேகரிக்கப்பட்டது. நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் அண்டாத இடத்தை தேர்வு செய்த வனச்சரக அலுவலர், அவற்றை பாதுகாப்பான சூழலில் மண்ணில் புதைக்க ஏற்பாடு செய்தார்.

இதையும் படியுங்கள் : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

45 நாட்களில் இருந்து 55 நாட்களுக்குள் முட்டைகள் குஞ்சு பொரித்து ஆமை குஞ்சுகள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவைகள் அனைத்தும் மீண்டும் பாதுகாப்பாக கடலுக்குள் விடப்படும் என வனச்சரக அலுவலகர் தெரிவித்தார்.

எம்.ஸ்ரீமரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.