”அம்மா நான் ஆஸ்கர் வாங்கிட்டேன்” என கண்ணீர்மல்க ஆஸ்கரை விருதை வாங்கிய கீ ஹூ குவான் தெரிவித்தது அனைவரையும் நெகிழச் செய்தது.
2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 13 ஆம் தேதியான இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு முறையும் ஆஸ்கார் விருது வழங்கும்போதும் இந்தியாவிலிருந்து அதற்கான கூடுதல் எதிர்பார்ப்பு எழுவதுண்டு. அந்த வகையில் ஒட்டுமொத்த இந்தியாவுமே பான் இந்தியா படமான ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு விருது கிடைக்குமா என எதிர்பார்த்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டின் பிரபல டால்பி தியேட்டரில் இன்று இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவில் இந்திய நடிகை தீபிகா படுகோன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஒருவருக்கு விருது வழங்க உள்ளார்.
இதனையும் படியுங்கள்: ஆஸ்கர் விருது 2023: LiveUpdates
இந்த விருதுக்கான பரிசீலனைக்கு இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள “நாட்டு நாட்டு’ பாடல் , ஆல் தட் பிரீத்தஸ், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆகியவை குறும்படங்கள் பிரிவிலும் அனுப்பப்பட்டுள்ளன.
ஆஸ்கர் விருது விழா தொடங்கியதும் ரெட்கார்பெட் எனப்படும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம் . இந்த வரவேற்பில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் குழுவினர் ராஜமௌலி, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி,ஆர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனையும் படியுங்கள் : ஆஸ்கர் விருதுகளும் இந்தியாவும்..!
ஆஸ்கர் விருதினை வழங்குவதற்காக தீபிகா படுகோன் வருகைபுரிந்தார். அழகிய கருப்பு நிற உடையில் அவர் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். எந்த பிரிவிற்கான விருதினை தீபிகா வழங்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதனை தொடர்ந்து 95வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஜிம்மி கிம்மலின் பாடலுடன் தொடங்கியது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை ‘பின்னாச்சியோ’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருதினை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்திற்காக நடிகர் கீ ஹுங் குவான் வென்றார். சிறந்த துணைநடிகைக்கான விருதினை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்திற்காக 64 வயதான ஜேமி லீ கர்டிஸ் பெற்றார்.
இதனையும் படியுங்கள்: ஆஸ்கர் கதவை தட்டிய தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை
விருதினை பெற்ற பின் கீ ஹுங் குவான் பெற்றார் உணர்ச்சிகரமாக பேசத் தொடங்கினார்.. “ எனது அம்மாவுக்கு 84 வயதாகிறது. அவர் இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக் கொண்டிருப்பார். அம்மா, நான் ஆஸ்கரை வென்று விட்டேன்.
"Mom, I just won an Oscar!" Ke Huy Quan sobs as he accepts the #Oscar for Best Supporting Actor. https://t.co/ndiKiHfmID pic.twitter.com/92QIp3PRmS
— Variety (@Variety) March 13, 2023
என்னுடைய பயணம் ஒரு படகில் தொடங்கியது. அகதிகள் முகாமில்தான் ஓர் ஆண்டைக் கழித்தேன். தற்போது ஆஸ்கர் மேடையில் விருதினை பெற்றுள்ளேன். இதைப் போன்ற நிகழ்வுகள் திரைப்படங்களில் மட்டுமே நடக்கும் என்கிறார்கள். இதுதான் அமெரிக்கனின் கனவு. எனது தாய்க்கும் அவரது தியாகங்களுக்கும் , எனது காதல் மனைவிக்கும் நன்றி ” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அவரது பேச்சை கேட்டு ஆஸ்கர் அரங்கமே கரகோஷங்களைத் எழுப்பியது.
சிறந்த ஆவணப்படம் :
சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருந்தை ‘நவல்னி’ (Navalny) வென்றது. நவல்னி படத்தின் குழுவினர் அதற்கான ஆஸ்கர் விருதினை பெற்றுக் கொண்டனர்.
– யாழன்