ஆஸ்கர் விருதுகளுக்கும், இந்திய சினிமா ரசிகர்களுக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. ஒவ்வொரு முறை ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும் போதும் இந்தியாவிலிருந்து அதற்கான எதிர்பார்ர்புகள் அதிகரித்து வருகின்றன.
2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 13 ஆம் தேதியான இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் ஆஸ்கர் விருது வழங்கும் போதும் இந்தியாவிலிருந்து அதற்கான கூடுதல் எதிர்பார்ப்பு எழுவதுண்டு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய சினிமாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையில் அதிக அளவுக்கு பங்களிப்பை தந்த படங்களில் தமிழ் படங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. முதல் ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட முதல் படமே தமிழ் படம் தான். 1969-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ‘தெய்வமகன்’ படம் ஆஸ்கர் விருந்துரையின் பரிந்துரையை பெற்றது. கடந்த வருடம் ஆஸ்கருக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற படம் ‘ஜெய்பீம்’.
ஆஸ்கர் விருது பெரிய குதிரைக் கொம்பா..என்ன..? ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட போது அவருக்கு தமிழ்நாட்டில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் பேசிய ஏ.ஆர்.ரகுமான் “ஆஸ்கர் விருது வாங்குவது பெரிய விசயம் இல்லை. நாம் தரமான படைப்புகளை எடுத்துள்ளோம் என ஆஸ்கருக்கு முறையாக அனுப்ப வேண்டும். நாம் என்ன படைப்பை எடுத்தோம் என அவர்களுக்கு தெரிந்தால் தானே விருதுக்கு பரிந்துரையாகும் “ என தெரிவித்தார்.
இதனையும் படியுங்கள்: ஆஸ்கர் கதவை தட்டிய தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை
சத்யஜித்ரே எனும் கலைஞன்..!
ஆஸ்கர் விருதுக்கு இந்திய படங்கள் தகுதியானவை பல இந்தியர்கள் நிரூபித்துள்ளனர். பல இந்தியர்கள் ஆஸ்கர் விருதுகள் பெற்றுள்ளனர். பல இந்தியர்கள் ஆஸ்கரை தட்டி சென்றுள்ளனர். இதில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அதிகம். இந்தியர்களில் முதல் முதலாக ஆஸ்கர் விருது பெற்றவர்களில் முதன்மையானவர் சத்யஜித்ரே. 1991 ஆம் ஆண்டு கவுரவ ஆஸ்கர் விருது சத்யஜித் ரேவிற்கு அறிவிக்கப்பட்டது.
அப்போது அவர் உடல் நலிவுற்று படுக்கையில் கிடந்தார். இதனால் சத்யஜித் ரேவைத் தேடி ஆஸ்கர் வந்து சேர்ந்தது. உலகில் எந்தவொரு கலைஞனுக்கும் கிடைத்திராத மரியாதையாக இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது. பதேர் பாஞ்சாலி படம் இருக்கும் வரை சத்யஜித்ரேயின் பெயர் இந்திய சினிமாவில் நீடித்து நிற்கும்.
முதல் ஆஸ்கர் விருது பெற்ற இந்தியர்கள்
ஆஸ்கர் விருதைப்பெற்ற முதல் இந்தியர், முதல் பெண்மணி என்கிற இரண்டு பெருமையையும் காந்தி படத்துக்காக பானு அத்தையா பெற்றார். ‘காந்தி’ படத்துக்காக 1983ம் ஆண்டு பானு அத்தையா ஆடை வடிவமைப்பு பிரிவில் வென்றார். இதன் மூலம் பானு அத்தையா முதல் ஆஸ்கர் விருது பெற்ற பெண் என்றும், ஆஸ்கர் நாயகி எனவும் அழைக்கப்பட்டார். காந்தி’ படத்துக்காக 1983-ம் ஆண்டு ரவிஷங்கர் இசையில் ”பெஸ்ட் ஒரிஜினர் ஸ்கோர்” எனும் பிரிவில் விருது வென்றார்.
ஆஸ்கரை தட்டித் தூக்கிய இசைப்புயல்..!
ஆஸ்கர் விருது பெற்றவர்களில் இந்தியர்கள் பலர் உண்டு. ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே மக்களது மனங்களில் நீங்கா இடம்பெற்றுள்ளனர். அவர்களில் இசைப்புயல் என ரசிகர்களால் அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் முக்கியமானர். இந்தியாவில் அவர் மட்டுமே இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளார். ”ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்துக்காக 2009 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசை ஆஸ்கர் விருது பெற்றார். அதனுடன் அதே படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஜார் இருவரும் சிறந்த பாடலுக்காக விருதை பகிர்ந்துக் கொண்டனர்.
அனிமேஷன் படத்திற்காக ஆஸ்கர் வாங்கிய ராகுல் தக்கார்
அனிமேஷன் படத்திற்காக 2016ம் ஆண்டு ராகுல் தக்கார், சிறந்த தொழில் நுட்பம் பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றார்.
ஆவணப்படத்திற்காக ஆஸ்கர் வாங்கிய ஆசிப் கபாடியா
‘ஏமி’ படத்திற்காக 2016 ஆம் ஆண்டு ஆசிப் கபாடியா சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
சிறந்த தொழில் நுட்பத்திற்கான ஆஸ்கர் விருது வாங்கிய விகாஷ் சத்யே
கேமரா சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக 2018 ஆம் ஆண்டு விகாஷ் சத்யே சிறந்த தொழில் நுட்பம் பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றார்.
எனவே இந்தியாவிற்கும் ஆஸ்கர் விருதுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த வகையில் 95-வது ஆஸ்கர் விருதுகள் இந்தியாவில் உள்ள அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.