உலகப் புகழ்பெற்ற திரைத்துறை விருதான ஆஸ்கர் விருதுவிழா கோலாகலமாக தொடங்கியது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டின் பிரபல டால்பி தியேட்டரில் இன்று இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவில் இந்திய நடிகை தீபிகா படுகோன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஒருவருக்கு விருது வழங்க உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விருதுக்கான பரிசீலனைக்கு இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள “நாட்டு நாட்டு’ பாடல் , ஆல் தட் பிரீத்தஸ், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆகியவை குறும்படங்கள் பிரிவிலும் அனுப்பப்பட்டுள்ளன.
இதனையும் படியுங்கள் : ஆஸ்கர் விருதுகளும் இந்தியாவும்..!
இந்தியாவின் சார்பில் மூன்று படங்கள் பரிசீலனைக்கு அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதனையும் படியுங்கள்: ஆஸ்கர் கதவை தட்டிய தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை
ஆஸ்கர் விருது விழா தொடங்கியதும் ரெட்கார்பெட் எனப்படும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம் . இந்த வரவேற்பில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் குழுவினர் ராஜமௌலி, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி,ஆர் ஆகியோர் பங்கேற்றனர்.