தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட முதுமலை தம்பதிகள் குறித்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது

முதுமலை யானைகள் சரணாலயத்தில் யானைகளை பராமரித்து வந்த தம்பதிகள் குறித்த ஆவணப்படமான “ தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது விழா மார்ச்…

முதுமலை யானைகள் சரணாலயத்தில் யானைகளை பராமரித்து வந்த தம்பதிகள் குறித்த ஆவணப்படமான “ தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 13 ஆம் தேதியான இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் ஆஸ்கார் விருது வழங்கும்போதும் இந்தியாவிலிருந்து அதற்கான கூடுதல் எதிர்பார்ப்பு எழுவதுண்டு. அந்த வகையில் பான் இந்தியாவிலிருந்து “நாட்டு நாட்டு’ பாடல் , ஆல் தட் பிரீத்தஸ், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் கிடைக்குமா என எதிர்பார்த்தனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டின் பிரபல  டால்பி தியேட்டரில் இன்று இந்திய நேரப்படி  காலை 5:30 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவில்  இந்திய நடிகை தீபிகா படுகோன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஒருவருக்கு விருது வழங்க உள்ளார்.

இதனையும் படியுங்கள்: ஆஸ்கர் விருது 2023: LiveUpdates

ஆஸ்கர் விருது விழா தொடங்கியதும் ரெட்கார்பெட் எனப்படும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம் . இந்த வரவேற்பில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் குழுவினர் ராஜமௌலி, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி,ஆர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனையும் படியுங்கள் : ஆஸ்கர் விருதுகளும் இந்தியாவும்..!

ஆஸ்கர் விருதினை வழங்குவதற்காக தீபிகா படுகோன் வருகைபுரிந்தார். அழகிய கருப்பு நிற உடையில் அவர் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்.  எந்த பிரிவிற்கான விருதினை தீபிகா வழங்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதனையடுத்து சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதுமலை யானைகள் சரணாலய தம்பதிகள் குறித்த ஆவணப்படமான தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இதனையும் படியுங்கள்: ”அம்மா நான் ஆஸ்கர் வாங்கிட்டேன்” – கண்ணீர்மல்க ஆஸ்கரை வாங்கிய கீ ஹூங் குவான்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய  யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர்.

https://twitter.com/guneetm/status/1635101386529722369

யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட படம் தான் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம். நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை கார்த்தி கொன்சால்வ்ஸ் இயக்கியிருக்கிறார். குனீத்மோங்கா தயாரித்திருக்கிறார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.