‘மோடி என்ற பெயரை ஊழல் என மாற்றிக்கொள்ளலாம்’; வைரலாகும் குஷ்புவின் பழைய ட்வீட்

‘மோடி என்ற பெயரை ஊழல் என மாற்றிக்கொள்ளலாம்’ என குறிப்பிட்டு இந்தியில் குஷ்பூ செய்த பழைய ட்வீட்டை காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக்கி வருகின்றனர். மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக…

‘மோடி என்ற பெயரை ஊழல் என மாற்றிக்கொள்ளலாம்’ என குறிப்பிட்டு இந்தியில் குஷ்பூ செய்த பழைய ட்வீட்டை காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அண்மையில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டில் அப்போது காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வகித்த குஷ்பு, மோடி பெயர் குறித்து இவ்வாறு குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்.

தற்போது அவர் பாஜகவில் இணைந்து, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள நிலையில், அவரது பழைய ட்வீட்டை காங்கிரஸ் கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர். அதில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பி அந்த ட்வீட்டை பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/khushsundar/status/1639586574345162754

இந்நிலையில், அந்த ட்வீட்டை தாம் அழிக்கப்போவதில்லை என்றும் தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடருங்கள் என்று காங்கிரஸ்க்கு குஷ்பு சவால் விடுத்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு இணையாக தனது பெயரை குறிப்பிட்டு காங்கிரஸ் பதிவிட்டு வருவதற்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.