தங்கம் விலையானது நாள் தோறும் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. திங்கள் கிழமையான நேற்று தங்கம் விலையானது, கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.14,440-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.14,500-க்கும், சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.







