மாவட்ட கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனியார் பள்ளி நல சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!

மாவட்ட கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 500க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நல சங்கத்தினர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள…

மாவட்ட கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 500க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நல சங்கத்தினர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கிகாரம், புதுப்பித்தல் ஆணை வழங்குதல் மற்றும் தர சான்றிதழ் போன்ற முக்கிய ஆணைகள் வழங்குவதற்கு, வேலூர் மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர் தாம்சன் அதிகப்படியான லஞ்சம் பெற்று வருவதாக தனியார் பள்ளி நல சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு 25 ஆயிரமும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு 50 ஆயிரமும் மற்றும் CBSE பள்ளிகளுக்கு 1.5 லட்சம் வரை லஞ்சம் கேட்டு வருகிறார் என்றும், அப்படி லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பள்ளிகளுக்கு முக்கிய ஆணைகள் வழங்குவதாக கூறுகிறார் என்று  தனியார் பள்ளி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இதனால் பல பள்ளிகளுக்கு புதுப்பித்தல் ஆணைகள் கூட கிடைக்காமல் போவதாக  கூறியுள்ளனர்.

இதையடுத்து  பள்ளிகளுக்கு ஆணைகள் வழங்குவதற்காக  லஞ்சம் கேட்ட மாவட்ட கல்வி அலுவலர் தாம்சன் மீது நடவடிக்கை எடுக்க கோரி 500க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நல சங்கத்தினர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

கோ. சிவசங்கரன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.