ராஜஸ்தானில் ராணுவ பயிற்சியின் போது, 3 ஏவுகணைகள் இலக்கு தவறி கிராமப் பகுதிகளுக்கு ஊடுருவி சென்று வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெய்சால்மரில் உள்ள பொக்ரானில், இந்திய ராணுவத்தினர் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். 10 முதல் 25 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் ராணுவத்தில் உள்ள வல்லுநர்களால் உருவாக்கப்பட்டது. இதனை ராணுவத்தின்ர் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தொழில்நுட்பக் கோளாறால் அதன் பாதையில் இருந்து விலகிச் சென்றது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கிலிருந்து விலகி அருகில் இருந்த கிராம பகுதிக்குள் சென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் நல்வாய்ப்பாக உயிர்சேதமோ, பொருட்சேமோ எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், வெடித்து சிதறிய இரண்டு ஏவுகணைகளின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் மூன்றாவது ஏவுகணையைக் கண்டுபிடிக்கவில்லை எனவும், தற்போது மூன்றாவது ஏவுகணையை தேடும் பணியில் காவல்துறை மற்றும் ராணுவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







