முக்கியச் செய்திகள் இந்தியா

பள்ளி ஆசிரியராக எம்.எல்.ஏ., தேர்வு

சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 23 ஆண்டுகள் கழித்து ஆசிரியர் பணிக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர் கிடைத்துள்ளது.

ஆந்திராவின் சோடவரம் என்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கரணம் தர்மஸ்ரீ. இவர் கடந்த 1998ம் ஆண்டு சமூகவியல் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கான தகுதி தேர்வை எழுதினார். அப்போது அவருக்கு பணி கிடைக்கவில்லை. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர், கடந்த 2004ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் தொடர்ச்சியாக தீவிர அரசியலில் உள்ளார். இந்த நிலையில் அப்போது அவருடன் தேர்வெழுதிய ஆசிரியர்கள் தங்களுக்கு அரசு பணியை ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. இதனையடுத்து ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தகுதியான அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி வழங்க உத்தரவிட்டார். அந்த வரிசையில் தற்போது சோடவரம் சட்டமன்ற உறுப்பினர் கரணம் தர்மஸ்ரீக்கும் ஆசிரியர் பணிக்கான நியமன ஆணை அனுப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், எனக்கு அப்போதே வேலை கிடைத்திருந்தால் கண்டிப்பாக ஆசிரியராக பணியில் சேர்ந்திருப்பேன். இந்த சமூகத்திற்கு சேவை செய்யும் புனிதமான தொழில் ஆசிரியர் பணி என்பது எனக் கூறினார்.

மேலும், இவ்வளவு காலதாமதாக ஒரு முடிவை அதிகாரிகள் எடுத்திருப்பதால், தற்போது தம்முடன் தேர்வெழுதிய பலர் பல்வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். இதுபோன்ற காலதாமதம் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரை சதம் விளாசிய கில்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா

Halley Karthik

ஓபிஎஸ், இபிஎஸ் ஒதுங்கி கொள்ள வேண்டும்- முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி

Saravana Kumar

வங்கதேசத்திற்கு இலவசமாக 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா

Gayathri Venkatesan