“துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்”: டிடிவி தினகரன்

துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பாளையங்கோட்டைதொகுதியில் அமமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முஹம்மது முபாரக்கை…

துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

பாளையங்கோட்டைதொகுதியில் அமமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முஹம்மது முபாரக்கை ஆதரித்து டிடிவி தினகரன் பரப்புரையில் ஈடுபட்டார். முன்னதாக நெல்லை மேலப்பாளையம் அருகே டிடிவி தினகரனுக்கு மேளதாளங்களுடன், பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பிற்கு திமுக மறைமுகமாக உதவியது ஏன் என கேள்வி ஏழுப்பினார். பாஜகவுடன் திமுக மறைமுக உறவு கொண்டுள்ளது எனக்குறைக்கூறிய அவர், பணபலத்தை நம்பி போட்டியிடும் கட்சிக்கும், தீயசக்தியான திமுகவிற்கும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.