மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆருடன் உறவுமுறை கொண்டாடுகிறார்- செல்லூர் ராஜூ!

தேர்தல் நெருங்குவதால் எம்.ஜி.ஆருடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறவுமுறை கொண்டாடுவதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் ஒரு கோடியே 61 லட்ச…

தேர்தல் நெருங்குவதால் எம்.ஜி.ஆருடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறவுமுறை கொண்டாடுவதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் ஒரு கோடியே 61 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் எந்த தலைவருக்கும், இல்லாத செல்வாக்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். அதனால் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலுக்காக எம்.ஜி.ஆருடன் திடீர் உறவுமுறை கொண்டாடுவதாகவும் விமர்சனம் செய்தார்.

முன்னதாக ஊழலுக்காக 2 முறை கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்திருந்தார். அதேபோல் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியலை பற்றி ஒன்றும் தெரியாது என்றும் கூறியிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply