திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார். அப்போது பேசிய அவர், திமுக வெற்றிபெறுவதன் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு எதிர்கால கட்டமைப்பு திட்டமிட்ட ஆட்சி செயல்படும் என தெரிவித்தார்.
வேளாண்மை துறையில் பிரச்சனைகளை சரி செய்து, விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்ககூடிய அரசாக திமுக செயல்படும் என்றும் அவர் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவோம் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







