முக்கியச் செய்திகள் தமிழகம்

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி: மு.க.ஸ்டாலின்

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பும், வழிகாட்டுதலும் வழங்க சுற்றுலா காவல்துறை அமைக்கப்படும் எனக்கூறினார்.

மேலும், பொதுமக்களின் பிரச்னைகளை காவல் நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க கைபேசி செயலி உருவாக்கப்படும் என தெரிவித்தார். கடந்த ஆட்சியில் நகைக்கடன் தள்ளுபடியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறினார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப் படும் என்று தெரிவித்த முதலமைச்சர், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

தான்சானியா அதிபர் காலமானார்!

Saravana Kumar

விரட்டும் வறுமை: விருதுகளை விற்று மருத்துவச் செலவு செய்த பிரபல நடிகை!

Halley karthi

யூடியூபர் மதனின் ஜாமீன் தள்ளுபடி

Gayathri Venkatesan