பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு அவருடைய நீண்ட நாள் காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். 39 வயதான இவருக்கு உலகம் முழுவதும் எக்கச்சக்க ரசிகர்கள். இவர், கடந்த 2004-ஆம் ஆண்டு தனது நண்பர் ஜேசன் ஆலன் அலெக்சாண்டர் என்பவரைத் திருமணம் செய்தார். அந்த திருமணம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து மூன்று நாட்களுக்குள்ளாகவே அந்த திருமணம் முடிவுக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிறகு, கெவின் ஃபெடர்லைன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். அந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு இசை வீடியோ ஒன்றில் பணியாற்றிய போது, சாம் அஸ்காரி என்பவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. பிறகு அந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் – சாம் அஸ்காரி திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது.
இதையடுத்து தங்களின் நிச்சயதார்த்த மோதிரம் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ். இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து களைத் தெரிவித்து வருகின்றனர்.