புதுச்சேரியில் சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது!

புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி,  முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த தம்பதி இரண்டாவது மகள் ஆர்த்தி (9) .  இந்த சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம்…

புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி,  முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த தம்பதி இரண்டாவது மகள் ஆர்த்தி (9) .  இந்த சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.  இதனிடையே கடந்த 2 ஆம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார்.  இந்நிலையில், மாயமான சிறுமியை பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.  இதையடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் பொற்றோர் புகார் அளித்தனர்.  இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தீவிரமாக தேடி வந்தனர்.

இதையும் படியுங்கள் : அதிமுகவில் விருப்பமனு சமர்பிக்க இன்று கடைசி நாள்!

இதையடுத்து,  அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிறுமி நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.  போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.  அப்போது சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.  மேலும், சிறுமியை விரைந்து மீடக்கக் கோரி குடும்பத்தினரும், உறவினர்களும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில்,  நேற்று சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி, கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.  முத்தியால்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, சிறுமியின் கை,  கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

போலீசார் சிறுமியின் உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமி கொலை செய்து கால்வாயில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

சந்தேகத்தின்பேரில் போலீசார் ஒரு முதியவர் உட்பட நான்கு பேரை அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது சிறுமியை கொலை செய்ததை கருணாஸ் (19) என்கிற இளைஞரும் விவேகானந்தன் (57) என்ற முதியவரும் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில் முதியவர் சிறுமியை பாலியல் கொடுமை செய்ய முயற்சித்ததில்,  அதிர்ச்சியில் சிறுமி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.  பின்னர் அவர் கை மற்றும் கால்களை கட்டி முதியவரின் வேஷ்டியில் வாய்காலுக்குல் சிறுமியின் உடலை போட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.