“50,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும்” – அமைச்சர் நிர்மல் குமார்!

ஆரம்பநிலை பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில் 10,000 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் நிர்மல் குமார் பதிலுறை வழங்கினார். எங்களுக்கு பனபலம் போன்ற எந்த ஒரு பலமும் கிடையாது, கட்சியின் தலைவர் விஜய் என்ற ஒரு பலம் தான். முதலமைச்சர் விஜயின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைகளை தேர்தல் போது பார்த்தோம். மக்களின் மனதில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து யாரும் படிக்க முடியாது. இந்த காலத்தில் இரண்டு மூன்று லட்சம் வைத்து ஒரு எம்எல்ஏ ஆக முடியுமா. எந்த ஒரு தேர்தலையும் சந்திக்க பயமில்லை, எங்களுக்கு தலைவர் இருக்கிறார். மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நோக்கி நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். எனக்கு கொடுத்த தொகுதி புது தொகுதி மக்களை நம்பி நின்றேன்.

புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்:

ஆரம்பநிலை பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில் 10,000 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தற்போதுள்ள மின்மாற்றிகளின் திறன் ரூ.110.76 கோடி மதிப்பில் உயர்த்தப்படும். தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தில் உள்ள மிக உயரழுத்த துணை மின் நிலையங்களில் மின்மாற்றிகளின் திறன் உயர்த்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ரூ.129.41 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மிக உயரழுத்த துணை மின் நிலையங்களில் தடையற்ற மின் விநியோகம் மற்றும் தொலைநிலைப் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் Protection & Communication சாதனங்கள் ரூ.120.32 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படும். மேலும், ஆயுட்காலம் முடிந்த அல்லது பழமையான பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் ரூ.92.3 கோடி மதிப்பில் மாற்றப்படும்.

சென்னையில் உள்ள 1,250 பகிர்மான மின்மாற்றி (DT) கட்டமைப்புகளை, சுமையைச் சுற்றி அமைப்புகளாக (RMU) மாற்ற ரூ.250 கோடி மதிப்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் இடையூறு ஏற்படும் போது மின் விநியோகத்தை விரைவாக மீட்டெடுத்து, தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 110 கி.வோ. துணை மின் நிலையங்களில் உள்ள 100 எண்ணிக்கையிலான Isolator Switch-களை ரூ.130 கோடி மதிப்பில் Breakers-ஆக மாற்றும் பணி மேற்கொள்ளப்படும்.

மிக உயரழுத்த (EHV) புதைவடப் பழுதுகளைக் கண்டறிவதற்காக Cable Fault Locator கருவி கொள்முதல் செய்யப்படும். 400 கி.வோ. வரையிலான மின்னழுத்த அளவுகளை கையாளும் திறன் கொண்ட இந்த கருவி ரூ.17 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படும். மின் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், மின் தடைகளை குறைத்தல், பழுதுகளை விரைவாக கண்டறிந்து சீரமைத்தல் மற்றும் பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் Integrated Data Lake, Enterprise Data Warehouse மற்றும் Advanced Analytic Tools அமைக்கப்படும். இதன் மூலம் மின்துறையின் தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, பாதுகாப்பாகவும் விரைவாகவும் பகுப்பாய்வு செய்யப்படும். மின் திட்டங்களுக்கு இணைப்பு வழி விண்ணப்பம்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான மின் கட்டமைப்பு இணைப்பு, திறந்த அணுகல் மற்றும் BESS திட்டங்களுக்கு இணையவழி விண்ணப்ப வசதி உருவாக்கப்படும்.

நகர்ப்புற புகார்களை பதிவு செய்யவும், அவற்றின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் WhatsApp Chatbot உருவாக்கப்பட்டு, நகர்ப்புற புகார் மேலாண்மை அமைப்புடன் (CCMS) ஒருங்கிணைக்கப்படும்.

பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வில் பணியிட நியமனங்களுக்கு இணையவழி கலந்தாய்வு (Online Counselling) நடத்துவதற்கான in-house application உருவாக்கப்படும். இது HRMS அமைப்புடன் இணைக்கப்பட்டு, ரூ.8.26 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

நிறுவன வள திட்டமிடல் (ERP) அமைப்பில் ஓய்வூதிய செயலாக்கத்திற்காக SAP ERP உடன் ஒருங்கிணைப்பு செய்யப்படும். இதற்காக ரூ.24.85 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதிய மின் இணைப்பு கோரும் வீட்டு விண்ணப்பதாரர்களுக்கான நடைமுறை எளிதாக்கப்படும்.
50,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும்.
14 கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்
சென்னையில் 3 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்
ஈரோடு மாவட்டத்தில் நீதிமன்றம் அமைக்கப்படும்
சார்பு நீதிமன்றம் தேவைப்படும்சென்னை பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் கூடுதல் மின்னூட்டிகள் அமைக்கப்படும்.
அதிக சுமை உள்ள துணை மின் நிலையங்களில் மின்மாற்றிகளின் திறன் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.