‘ஜெயிலர் 2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

‘ஜெயிலர் 2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘அல்ல போலேலோ’ பாடல் வெளியானது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. இதனிடையே ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘அல்ல போலேலோ’ பாடல் வெளியானது. இந்தப் பாடலில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் ஓடிடி ஒளிபரப்பு உரிமை 160 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.