நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பழம்பெரும் திரைக்கலைஞர், பெருமதிப்பிற்குரிய அம்மா சௌவுகார் ஜானகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
மகளாக, கதாநாயகியாக, தாயாக பல்வேறு கதாபாத்திரங்களில் மூன்று தலைமுறை நடிகர்களுடன் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, மக்களை மகிழ்வித்த அம்மா அவர்களின் கலைப்பணி மிகுந்த போற்றுதலுக்குரியது.
அம்மா சௌவுகார் ஜானகி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுகின்றேன்.
அம்மா சௌவுகார் ஜானகி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




