புதுக்கோட்டை அருகே பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி! ஆச்சரியமடைந்த மக்கள்…

புதுக்கோட்டை அருகே 1 தலை, 8 கால்கள், 2 உடல்கள், 4 காதுகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்-சுமதி தம்பதி.…

புதுக்கோட்டை அருகே 1 தலை, 8 கால்கள், 2 உடல்கள், 4 காதுகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள்
ராஜேந்திரன்-சுமதி தம்பதி. இவர்கள் ஆடு வளர்ப்பதையே பணியாக செய்து வருகின்றனர். இவர்கள் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

இதையும் படிக்கவும்: “நெரிசலில் நெளியும் சென்னை” நியூஸ் 7 தமிழ் களஆய்வு: மக்கள் சொல்லும் தீர்வு என்ன?

இந்நிலையில் ராஜேந்திரன்-சுமதி தங்களது ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது அவர்கள் வளர்த்து வந்த ஆடு ஒன்று பட்டத்திக்காடு சித்திவிநாயகர் கோயில் அருகே உள்ள பட்டத்தி குளத்தில்1 தலை, 2 உடல்கள், 8 கால்கள், 4 காதுகளுடன் குட்டியை ஈன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் குட்டி பிறந்த சற்று நேரத்திலேயே உயிரிழந்தது.‌ அதனை தொடர்ந்து தாய் ஆடும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆச்சரியத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியை பட்டத்திக்காடு கிராம மக்கள் மற்றும்
சுற்று வட்டார பகுதிகளான கறம்பக்குடி புதுப்பட்டி மஞ்சுவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்றனர். 1 தலை, 8 கால்கள், 2 உடல், 4 காதுகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி பிறந்து இறந்தது ஒரு பக்கம் சோகத்தை ஏற்படுத்தினாலும், மற்றொருபுறம் இணையதளங்களில் பரவி பொது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.