டெல்லியில் வரலாற்று சின்னங்களை பார்வையிட்ட டேவிட் வார்னர் – வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது குடும்பத்துடன் டெல்லியில் உள்ள ஹுமாயூன் சமாதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட்  போட்டிகளில்…

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது குடும்பத்துடன் டெல்லியில் உள்ள ஹுமாயூன் சமாதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி உள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட்  போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறது. பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்திய சினிமா பாடலுக்கு நடனமாடுவது, டயலாக்குகளை பேசுவது போன்ற வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்ற போது, தனது குடும்பத்துடன் ஹுமாயூன் சமாதிக்கு சென்றுள்ளார். இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து, “குடும்பத்துடன் வெளியில் வந்துள்ளேன், இது எந்த இடம்?” என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

அண்மைச் செய்தி:அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிந்தது

இந்த புகைப்படம் இதுவரை 5.46 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. பல ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், “வார்னர் போல் இந்தியாவை கொண்டாடியதில்லை” என்று பதிவிட்டுள்ளார். ஹுமாயூன் சமாதி டெல்லியில் நிஜாமுதீன் கிழக்கில் உள்ள மதுரா சாலையில் உள்ளது. இது 1570-ம் ஆண்டு இது கட்டப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.