“நெரிசலில் நெளியும் சென்னை” நியூஸ் 7 தமிழ் களஆய்வு: மக்கள் சொல்லும் தீர்வு என்ன?

மெட்ரோ பணிகளால் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கல்கள் குறித்தும், அப்பகுதி பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளை குறித்தும் விரிவாகப் பார்க்கலாம். சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும்…

மெட்ரோ பணிகளால் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கல்கள் குறித்தும், அப்பகுதி பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளை குறித்தும் விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும் மக்கள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நியூஸ் 7 தமிழ், தற்போது மீண்டும் சென்னையில் இன்று களமிறங்கியது.

மெட்ரோ ரயில் பணிகளால் சென்னைவாசிகள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், “நெரிசலில் நெளியும் சென்னை” என்ற தலைப்பில் இன்று ஒருநாள் முழுவதும் பிரமாண்ட களஆய்வை நடத்தியது.

இதையும் படிக்கவும் : பழைய சோறு குறித்த ட்வீட்; தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவிற்கு குவியும் பாராட்டு!

பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளால், துரைப்பாக்கம், சிறுசேரி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. எனவே விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு, மெட்ரோ பணிகளை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மெட்ரோ பணிகளால் தினம் தினம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு கள ஆய்வின் போது மக்கள் சில கருத்துக்களை கூறியுள்ளனர். அதில், குண்டும் குழியுமான சாலைகளை சரி செய்யாமல் மெட்ரோ பணிகள் நடைபெறுவது பயணங்களை கடினமாக்குவதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும் மெட்ரோ பணிகள் அலட்சியமாக நடைபெறுவதே சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் எனவும், மெட்ரோ பணி ஒப்பந்தத்தை பெற்ற நிறுவனம் சாலை பணிகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் கோடைக்காலம் தொடங்கும் முன்னரே தரமான சாலைகளை அமைக்க வேண்டும் எனவும், பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். பூந்தமல்லி வரையிலான சாலை பராமரிப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.22.79 கோடியை சரியாக பயன்படுத்தவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.