களத்தில் இறங்கும் புதிய கார்கள்; Nexon, Harrier மற்றும் Safari Red Dark எடிஷன்களில் என்ன எதிர்பார்கலாம்?

டாடா மோட்டார்ஸ் மேம்படுத்தப்பட்ட புதிய மற்றும் பிரபலமான Nexon SUV கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது.  Nexon, Harrier மற்றும் Safari Red Dark எடிஷன் கார்களை நாளை (பிப்ரவரி 22, 2023) வெளியிடப்படும் என்று Tata…

டாடா மோட்டார்ஸ் மேம்படுத்தப்பட்ட புதிய மற்றும் பிரபலமான Nexon SUV கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது. 

Nexon, Harrier மற்றும் Safari Red Dark எடிஷன் கார்களை நாளை (பிப்ரவரி 22, 2023) வெளியிடப்படும் என்று Tata Motors இன் சமீபத்திய டீஸர் தெரிவித்திருந்தது. கடந்த மாதம் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஹாரியர் மற்றும் சஃபாரி டார்க் ரெட் எடிஷன் இரண்டும் காட்சிப்படுத்தப்பட்டன.

இதில் பெரிய டிஸ்ப்ளே அதிநவீன மென்பொருள் மற்றும் மேம்படுத்தப்பட இண்டர்ஃபேஸ்  பெருத்தப்பட்டுள்ளது. முன்பு பகுதியளவு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இருந்த நிலையில் இப்போது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் முழுவதுமாக டிஜிட்டல் மயமாகப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களின் புதிய டார்க் ரெட் எடிஷன்களின் வெளியீடு நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவிகளுக்கு டார்க் ரெட் பதிப்புகள் கிடைக்கும். ஜெட் எடிஷன் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்த புதிய SUVகள் வரிசையின் உச்சத்தில் தங்கள் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டார்க் ரெட் எடிஷனில், வழக்கமான டார்க் எடிஷனில் இருந்து அவற்றின் வெளிப்புறங்களில் சிறிய அளவிலான காஸ்மெட்டிக் மேம்பாடுகளைக் கொண்டுள்ளன. பிரேக் காலிப்பர்கள், முன் கிரில்லின் ஒரு சிறிய பகுதி மற்றும் முன் ஃபெண்டர்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன. உட்புறங்களில் டாடாவின் “கார்னிலியன் ரெட்” வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

லெதரெட் இருக்கைகள்,  மற்றும் முன் மற்றும் பின்புறத்தில் உள்ள ஆர்ம்ரெஸ்ட்கள் அனைத்தும் இந்த நிறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. கதவு கைப்பிடிகள் மற்றும் பனோரமிக் சன்ரூப்பைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் “கார்னிலியன் ரெட்” வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த மேம்படுத்தல்கள் தவிர, புதிய மாடலில் பாஸ் மோட், 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள் உள்ளன. ஹேரியர் டார்க் ரெட் எடிஷன், பின் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 18 இன்ச் கறுப்பு அலாய் வீல்கள் உட்பட, சஃபாரியில் உள்ள அதே மெக்கானிக்கல் பாகங்ககளுடன் வெளியிடப்படுவதாக தெரிகிறது. இந்த நெக்ஸான் ரெட் டார்க் பதிப்பிற்கான மேம்படுத்தல்கள் பெரும்பாலும் மேலோட்டமானவையாக இருப்பினும், புதிய தொடுதிரை மற்றும் மென்பொருள் ஆகியவை வரவேற்கத்தக்க வகையில் உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.