காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கோவூரில் நின்ற இடத்தில் இருந்தே இறகுப்பந்து ஆடி பயிற்சியாளரை ஓட விட்டார் அமைச்சர் தா.மோ. அன்பரசன்.
திமுகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை அக்கட்சி சார்பில் கோலாகலமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் மாங்காடு அடுத்த கோவூரில் இறகுபந்து போட்டி மற்றும் நீச்சல் போட்டி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை அமைச்சர்
தா.மோ. அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இறகுப்பந்து போட்டியை
தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் நின்ற இடத்தில் இருந்தபடியே இறகு பந்து
விளையாடி பயிற்சியாளரை அங்குமிங்குமாக ஓட விட்டார்.
விளையாட்டு வீரராக மாறி அமைச்சர் இறகு பந்து விளையாடியதை கூடியிருந்த
தொண்டர்கள் கைதட்டி விசில் அடித்து ரசித்தனர். மேலும் சிறுவர்களுக்கு நீச்சல்
பயிற்சியை முக்கியமாக கற்று கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக
நீச்சல் போட்டியும் நடைபெற்றது. ஆறு வயது முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் பங்கேற்ற நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.