போலந்து நாட்டில் தமிழ்சங்கத்தினர் சார்பில் கோடையை வரவேற்கும் நிகழ்வு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வெளிநாட்டினர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
கோடையை வரவேற்கும் விதமாக போலந்து நாட்டில் முதன்முறையாக, போலந்து
தமிழ்ச்சங்கத்தின் சார்பாக பட்டம் விடும் விழா வார்சா நகரில் நடைபெற்றது. தமிழர்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள், வெளிநாட்டினர் என ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வண்ணமயமான பட்டங்களை பறக்க விட்டு மகிழ்ந்தனர்.
விழாவில் கலந்து கொண்டவர்கள் தங்கள் வீட்டில் சமைத்த உணவை பகிர்ந்து உண்டனர். குழந்தைகள் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடந்தது.
அனைத்து இந்தியர்களையும் ஓரணியில் ஒன்று சேர்த்த நிகழ்வாக இது அமைந்தது என போலந்து தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் பட்டம் விடுதல், கயிறு இழுக்கும் போட்டி, லெமன் இந்த ஸ்பூன், சாக்கு ஓட்டம் ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்தி கோடையை வரவேற்றனர். இந்நிகழ்வு போலந்து தமிழ் சங்கத்தின் தலைவர் யூசுப் தலைமையில் நடைபெற்றது.







