ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டி வருகிற 13ம்தேதி நடைபெற உள்ள நிலையில் ஸ்குவாஸ் வீரர் அபய்சிங் நியூஸ் 7 தமிழிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
2023-க்கான ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சார்பாக நான்கு பேர்
பங்கேற்க உள்ளதாகவும் அதில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தமிழக
விளையாட்டு மேம்பாட்டு துறை உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி தெரிவித்தார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 2023-க்கான ஸ்குவாஷ் உலக கோப்பையை வரும் 13-தேதி நடைபெற உள்ளது.
அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 2023-க்கான ஸ்குவாஷ் உலகக் கோப்பை வரும் ஜூன் 13 தேதி தொடங்கி 17 தேதி வரை நடைபெறுகிறது.
நாளை மாலை 6 மணி அளவில் இதற்கான பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது. முதன்மை போட்டி 13 தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பையை போட்டியில் 8 அணிகள் பங்கு பெறுகின்றனர் ஸ்குவாஷ் உலகக் கோப்பையை கடைசி 2011 நடைபெற்றது. அதன் பிறகு இந்த ஆண்டுதான் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான விதிமுறைகளை மாற்றப்பட்டு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த போட்டியில் ஒரு நாட்டில் இருந்து இரண்டு பெண்கள் இரண்டு ஆண்கள் பங்கேற்க உள்ளனர். ஒரு அணியினருக்கு ஐந்து சுற்றுகள் மேலும் ஏழு புள்ளிகள் கொண்டு இந்த போட்டிகள் நடைபெறும். இந்திய அணியின் சார்பில் நான்கு பேர் பங்கேற்க உள்ளனர். அதில் தமிழ் நாட்டை நாட்டைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
இறுதி போட்டி 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி
பெறுபவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில்
சான்றிதழ் வழங்கப்படும் பொது மக்கள் இந்த போட்டியை காணும் வகையில் அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்குவாஸ் இந்திய ஸ்குவாஸ் வீரர் அபய்சிங் நியூஸ் 7 தமிழிக்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..
“ உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியை சொந்த மண்ணில் விளையாடுவது பெருமையாக உள்ளது. முழு திறனுடன் தொடர் முழுவதுமாக விளையாட வேண்டும்.
சென்னை தான் எனது சொந்த மண். அணியின் சீனியர் வீரர்களுடன் ஆலோசித்து சிறப்பாக விளையாடுவோம்” என தெரிவித்தார்.







