அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் தொடர்ந்து 8-வது முறையாக நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (13.10.2023) உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (13.10.2023) உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தது.  செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். அவருடைய நீதிமன்றக் காவல் இன்று (13.10.2023) முடிவடைந்ததையடுத்து புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து,  அக்டோபர் 20 ஆம் தேதி வரை அவரது காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து 8 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடா்பாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில்,  அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை வரும்  16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உண்மைச்செய்திகளை உடனுக்குடன் பெற News7 Tamil-ன் WhatsApp channel – ல் இணைந்திடுங்கள் – https://whatsapp.com/channel/0029Va6Hv3M4tRrwjJ2hPo0O

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.