பெண்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்த அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜு, பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தது அதிமுக அரசுதான் எனக் கூறி வாக்கு சேகரித்தார். மதுரை மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர்…

மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜு, பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தது அதிமுக அரசுதான் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.

மதுரை மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ அந்த தொகுதிக்கு உட்பட்ட கோவில் பாப்பாகுடி பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில்தான் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது என்றார்.

கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியதாக கூறி அவர் வாக்கு சேகரித்தார். விடியல் தரும் ஆட்சி அதிமுக, கொரோனா காலத்தில் எட்டு மாதங்களாக விலையில்லா பொருட்கள் வழங்கியது இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான் எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.