கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு

கொரோனாவுக்கு எங்கும் சிகிச்சை மறுக்கப்படவில்லை என்ற நிலை ஒரு வாரத்தில் உருவாகும் என அமைச்சர் பிகே சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியில் 104 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா…

கொரோனாவுக்கு எங்கும் சிகிச்சை மறுக்கப்படவில்லை என்ற நிலை ஒரு வாரத்தில் உருவாகும் என அமைச்சர் பிகே சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியில் 104 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை பள்ளியின் முன்னாள் மாணவர்கள், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அமைத்துள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் இதனை ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தேவைப்படும் அளவிற்கு இந்த மையம் நவீனப்படுத்தப் படும். நாளை லயோலா கல்லூரி, ஈஞ்சம்பாக்கம், பெரம்பூரிலும் சிகிச்சை மையங்கள் செயல்படவுள்ளது. தடுப்பூசிகள் பற்றக்குறை இல்லை. கொரோனாவுக்கு சிகிச்சை எங்கும் மறுக்கப்படவில்லை என்ற நிலை ஒரு வாரத்தில் உருவாகும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.