இளம்பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்ஷிஜன் பொருத்தப்பட்ட நிலையில் பாடல் கேட்டுக்கொண்டு, பாடலுக்கு ஏற்றவாறு கைகளை அசைத்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாது, அவரது தைரியமும், தன்னம்பிக்கையும் அனைவரயும் வியப்படைய செய்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் இந்தியா முழுவதும் பெரும் உயிரிழப்புகளைசந்தித்து வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள் , பெரியோர்கள் என கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மற்றும் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் ஆக்ஷிஜன் பொருத்தப்பட்ட நிலையில் பாடல் கேட்டுக்கொண்டு, பாடலுக்கு ஏற்றவாறு கைகளை அசைத்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாது, அவரது தைரியமும், தன்னம்பிக்கையும் அனைவரயும் வியப்படைய செய்துள்ளது. மருத்துவர் மோனிகா லங்கே இந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “இந்த வீடியோவில் இருக்கும் இளம்பெண்ணுக்கு வயது 30, இவர் மிகவும் தைரியமான பெண், இவருக்கு ஐசியு பெட் கிடைக்கவில்லை அவருக்கு ரெம்டெசிவர் மருந்து கொடுக்கப்பட்டது. என்னிடம் பாடல் கேட்க அனுமதி கேட்டார் நான் அனுமதித்தேன். இதில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இலக்கவேண்டாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இரண்டு நாட்களுக்கு பிறகு மருத்துவர் மோனிகா பகிர்ந்த ட்விட்டர் பதிவில் “அவருக்கு ஐசியு பெட் கிடைத்துவிட்டது , அனால் அவரது உடல் நிலை சீராக இல்லை. அவருக்காக அவரது பெண் குழைந்தை வீட்டில் காத்திருக்கிறது, அனைவரும் அவரின் உடல் குணமடைய பிராத்தனை செய்யுங்கள்” என்று பகிர்ந்திருந்தார். மே 13 மோனிகா லங்கேஷ் “நாம் அந்த தன்னம்பிக்கை நிறைந்த தைரியமான பெண்ணை இழந்துவிட்டோம், அவரது குழந்தையும், குடும்பமும் அவரின் இழப்பை தாங்கிக்கொள்ள பிராத்தனை செய்யுங்கள்” என்று பகிர்ந்திருந்தார்.
அனைவராலும் இந்த சிங்கப்பெண்ணின் வீடியோ பகிரப்பட்டது, மேலும் அனைவரையும் மனம்நெகிழ செய்துள்ளது.







