தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாத சம்பளம் இன்றி பணியாற்றும் கோயில் பணியாளர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை, கோயில்களின் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தது, மற்றும் கோயில் சொத்துக்கள் மீட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நீண்ட நாள் கோரிக்கையான, கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் குறித்தும் கோயில்களுக்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.







