மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெறவுள்ளது.
இதில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உட்பட மற்ற மாநில நிதியமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் காணொலி மூலம் பங்கேற்கவுள்ளனர்.
இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் கருப்பு பூஞ்சைக்கான மருந்து உள்ளிட்ட பொருட்களுக்கு, வரி விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்சிஜன், சானிடைசர், வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு, ஜிஎஸ்டி விலக்கு அளிப்பது குறித்து மேகாலயா துணை முதல்வர் கோன்ராட் சங்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவின் அறிக்கை தயாராகியுள்ள நிலையில் இன்று இந்த அறிக்கை குறித்தும் விவாதம் நடைபெறும் என கூறப்படுகிறது.







