முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ் சொன்னதால் போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட்டதா? ராஜ கண்ணப்பன் மறுப்பு

ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு, தான் சொல்லியே தமிழக அரசு நிலுவைத் தொகை கொடுத்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுவது ஏற்புடையதல்ல என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா காலத்திலும் திமுக அரசு சிறப்பாக செயல்படுவதாகக் கூறினார். மகளிர் மட்டும் பயணிக்கும் வகையில் பிங்க் நிற பேருந்துகள் இயக்குவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி குறிப்பிட்ட அவர், பேருந்துகளின் எண்ணிக்கைக் குறைக்கப்படாது என்றும் ஊரடங்கு காலத்தில் முன்களப் பணியாளர்களுக்காக பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்: சத்யபிரதா சாகு

Gayathri Venkatesan

ஏழைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்: ராகுல் காந்தி!

Ezhilarasan

நடிகை நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய நடிகை சமந்தா!

Vandhana