12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்: எல்.முருகன்

தமிழக அரசு 12ம் வகுப்பு தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். மத்திய அரசின் 8 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, சேவை வாரமாக பாஜக…

தமிழக அரசு 12ம் வகுப்பு தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

மத்திய அரசின் 8 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, சேவை வாரமாக பாஜக கடைபிடிக்கிறது. இதையடுத்து சென்னை தரமணியில் உள்ள வி.எச்.எஸ்.மருத்துவமனையில், பாஜக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 125 பேர் ரத்ததானம் செய்தனர்.

இந்த முகாமை பார்வையிட்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், நிகழ்ச்சிக்கு பின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது குறித்து எவ்வளவு நாள்தான் ஆலோசனை செய்வார்கள் என்று தெரியவில்லை. தமிழக அரசு உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை, போதிய அளவில் தேவைகேற்ப வழங்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவரிடம் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது தொடர்பாக கேட்கப்பட்டது. அப்போது, திமுக இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறது, ஆனால் ஆதரவாக இல்லை எனக் குற்றம் சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.