உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த ஆட்சியில் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்கு வதற்காக அமைக்கப்பட்ட குழு, முறைகேடு காரணமாக கலைக்கப்பட்டதாகக் கூறினார்.
பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் முறையாக 22ஆம் தேதி அனுப்பி வைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களுக்கு மதிப்பெண் சென்றடைந்தவுடன், வருகிற 26ஆம் தேதி முதல் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.







