தவறான கருத்துகளை பரப்பி சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது என எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சேலம் ஜலகண்டாபுரம் பகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு,
தற்போது, நடைமுறைப்படுத்தாமல் திமுக அரசு மக்களை திட்டமிட்டு ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டினார். அத்துடன் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் அதிமுக சட்டப்போராட்டம் நடத்தி, கர்நாடகா தண்ணீரை தேக்கவும், தடுக்கவும் கூடாது என்று உச்சநீதிமன்றத்திடம் இருந்து தீர்ப்பை பெற்றுத் தந்தது. தற்போது கர்நாடக அரசு வேண்டுமென்றே தமிழகத்திற்கு வரும் தண்ணீர் தடுப்பதற்காக மேகதாது அணை கட்டப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது எனவும் மேகதாது அணை கட்டுவது மூலமாக டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் என்று குறிப்பிட்டார்.
சசிகலா குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தவறான செய்திகளை சசிகலா பரப்பி வருவதாக சாடினார். அத்துடன் எவ்வளவு தவறான கருத்துகளை பரப்பினாலும், சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது என தெரிவித்தார்.