முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 10 ஆயிரம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீட்டை ஈர்த்திட, 33 நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. சென்னை கிண்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு…

10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீட்டை ஈர்த்திட, 33 நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

சென்னை கிண்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 33 தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

ஏற்கனவே, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.