எய்ம்ஸ் பணிகள்: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறார் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெல்லி செல்லும் முன்பு, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய…

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டெல்லி செல்லும் முன்பு, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்பகல் 2 மணிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சு மாண்டவியாவை சந்திக்கவுள்ளதாகக் கூறினார்.

இந்த சந்திப்பின்போது 11 புதிய மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை உடனே தொடங்கப்பட வேண்டும், நீட் தேர்வுக்கு விலக்க அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், சித்தா பல்கலைக்கழகம் அமைவது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.