முக்கியச் செய்திகள் தமிழகம்

மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 590 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களில் உண்டியல் வருமானம் 73 லட்ச ரூபாய்
கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன்
கோயிலுக்கு சொந்தமான 11 கோவில்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை
தொகை, மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு
ஒருமுறையும் எண்ணப்படும்.

இதன்படி, நேற்று நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், வங்கி
ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் உண்டியல் வருமானமாக 73 லட்சத்து 31 ஆயிரத்து 180 ரூபாயும், 590 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி, மற்றும் 22
அயல்நாட்டு கரன்சிகள் ஆகியவை காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளது என
தெரிவிக்கபட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திலும்
உண்டியல் தொகை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 31 லட்சத்து 2 ஆயிரத்து 872
ரூபாயும், 290 கிராம் தங்கமும், 610 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றதாக கோயில்
நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தஞ்சை மாணவி தொடர் ஓட்டத்தில் நோபல் உலக சாதனை!

Gayathri Venkatesan

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி!

Saravana Kumar

ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம் – நடிகர் ரஜினி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Jeba Arul Robinson